அஜித் பட நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
அஜித் பட நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித் பட நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஜூனியர் பாலையா. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சின்னத்தாய், சங்கமம், வின்னர் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, சமுத்திரகனியின் சாட்டை போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் வலம் வந்த ஜூனியர் பாலையா இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here