உங்களுக்கு நான் வில்லன் தான்.., ஆனா அவருக்கு நான் தான் ஹீரோ.., நெஞ்சை உருகவைத்த ஜான் கொக்கன்!!

0
உங்களுக்கு நான் வில்லன் தான்.., ஆனா அவருக்கு நான் தான் ஹீரோ.., நெஞ்சை உருகவைத்த ஜான் கொக்கன்!!
உங்களுக்கு நான் வில்லன் தான்.., ஆனா அவருக்கு நான் தான் ஹீரோ.., நெஞ்சை உருகவைத்த ஜான் கொக்கன்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன் கோஷ்டியில் அடியாளாக நடித்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் தான் நடிகர் ஜான் கொக்கன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், பேரும் புகழும் கொடுத்த திரைப்படம் என்றால், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தில் வேம்புலியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று, அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக எஸ் எஸ் மியூசிக் தொகுப்பாளினி பூஜா ராமசந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை திடீர் விபத்து.., இது திட்டமிட்ட சதியா? இல்ல விதியா? ரசிகர்கள் கேள்வி?

இந்த தம்பதியருக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கன் தனது இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது தனது மகனை தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக, நான் சினிமாவில் வேண்டுமானலும் வில்லனாக இருக்கலாம். ஆனால் என் மகனுக்கு எப்போதும் நான் தான் ஹீரோ என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here