“தனி ஒருவன் – 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த நடிகர் ஜெயம் ரவி.. குஷியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் எக்கசக்க படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். தற்போது  இவர் நடிப்பில் சைரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க, கௌஷிக் மஹாதா, யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் ஜெயம் ரவி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தனியார் Youtube சேனல் ஒன்றில் தனி ஒருவன் 2 திரைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் எழுத்து வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு கோடை கால விருந்தாக திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here