அரசியல் பேசும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்.., அதிரடியாக காட்சிகளை நீக்கிய சென்சார் நிறுவனம்!!

0
அரசியல் பேசும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்.., அதிரடியாக காட்சிகளை நீக்கிய சென்சார் நிறுவனம்!!
அரசியல் பேசும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்.., அதிரடியாக காட்சிகளை நீக்கிய சென்சார் நிறுவனம்!!

ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படத்தில் 2 நிமிடம் காட்சிகளை சென்சார் அமைப்பு நீக்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அகிலன் திரைப்படம்

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி. தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்துள்ளனர். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரியாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் கவனம் பெற்றது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு சென்சார் நிறுவனம் யு/எ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ச்சே.., என்ன செயல் இதெல்லாம்.., பாரதி கண்ணம்மா நடிகை செய்த திருட்டுத்தனம்.., அம்பலமான வீடியோ!!

இந்நிலையில் அகிலன் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படத்தில் சென்சார் நிறுவனம் 2 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த காட்சியில் அரசியல் குறித்து காரசாரமான வசனங்களும் ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகளும் இருந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here