ஜிவி பிரகாஷ் நடிக்கும் கள்வன் திரைப்படம்.., மோஷன் போஸ்டரை வெளியிட்ட முக்கிய பிரபலம்!!

0
ஜிவி பிரகாஷ் நடிக்கும் கள்வன் திரைப்படம்.., மோஷன் போஸ்டரை வெளியிட்ட முக்கிய பிரபலம்!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்க இருக்கும் புது படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார்:

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என ஜொலித்து வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இசையை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் டிராப் சிட்டி, இடிமுழக்கம் மற்றும் 13 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த செல்ஃபி, ஜெயில் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் புதிதாக நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது புதுமுக இயக்குனர் பி.வி. சங்கர் படைப்பில் உருவாகி வரும் கள்வன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் பாரதிராஜா மற்றும் லவ் டுடே இவானா ஆகியோர் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் Entry கொடுக்கும் ரியல் ஜோடி., அப்ப டிஆர்பி களை கட்ட போகுது!!

மேலும் இப்படத்தில் Kpy தீனா காமெடியனாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கள்வன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை வைத்து பார்க்கும் பொழுது காடுகள் சம்பந்தப்பட்ட கதையாகத்தான் படம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here