மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

மலையாள வட்டாரங்களில் அசுரவித்து, ஹார்ட் பீட்ஸ் மற்றும் ஒன் வே டிக்கெட் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கோவிந்தன் குட்டி. இவர் நடிப்பது மட்டுமின்றி பல டிவி நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது எல்லோர் மாதிரி இவரும் தனியாக தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பிசியாக இருந்து வரும் கோவிந்தன் குட்டியின் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கடந்த மாதம் போலீசிடம் புகார் கொடுத்தார். அதாவது தன்னை திருமணம் செய்வதாக கூறி பலமுறை என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தனுஷ் குடும்பத்தால் கைவிடப்பட்ட அந்த நடிகைக்கு விரைவில் திருமணமா?? வெளியான புகைப்படம்!!

அதன் பின்னர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து புகார் கொடுத்த அந்த பெண்ணை கோவிந்தன் குட்டி மற்றும் சில சினிமா பிரபலங்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. நடிகர் கோவிந்தன் குட்டி முன் ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமினை ஏற்றுக் கொள்ளாத அந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நடிகர் கோவிந்தன் குட்டி மீது நேற்று மேலும் ஒரு பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் மீது புகார் கொடுத்துள்ளார். தற்போது அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here