காமெடி நடிகர் கவுண்டமணி புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளதாக சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கவுண்டமணி:
தமிழ் திரையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் கவுண்டமணி. இவர் காமெடி மட்டுமின்றி பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிக்காத ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தாலும், படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி. இப்படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்குகிறார்.
அதுபோக இப்படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கவுண்டமணிக்கு தற்போது 83 வயது ஆகிறது. 83 வயதில் எந்த நடிகரும் ஹீரோவாக நடித்ததே இல்லை. முதன் முறையாக கவுண்டமணி ஹீரோவாக நடித்து சாதனை படைத்துள்ளார்.