இந்த ஆண்டுக்குள் எனக்கு கல்யாணம்.,மணப் பெண் குறித்த தகவலை வெளியிட்ட நடிகர் கௌதம் கார்த்திக்!!

0
இந்த ஆண்டுக்குள் எனக்கு கல்யாணம்.,மணப் பெண் குறித்த தகவலை வெளியிட்ட நடிகர் கௌதம் கார்த்திக்!!

நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக், இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பேட்டி:

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்தி. இவரது மகன் கௌதம் கார்த்திக், கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த தேவராட்டம் என்ற திரைப்படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் சிம்புவுடன் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது, நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்ததாக பேசப்பட்டது. இது குறித்த தகவலை, இவர் மஞ்சிமா பிறந்தநாளன்று தெரிவித்தார். ஆனால், அதை மறுத்த நடிகை மஞ்சிமா மோகன், இது உண்மை இல்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் கௌதம், இந்த ஆண்டுக்குள் எனது திருமணம் நடக்கும் என்றும் மணப்பெண் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவேன் என்றும் தற்போது பேட்டியளித்துள்ளார். இந்த செய்தி, தற்போது  சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here