திருமணம் குறித்த செய்தியை வெளியிட்ட கெளதம் கார்த்திக் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

நவரச நாயகன் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசும் போது திருமணத்தை பற்றி கேள்வி ஏழுப்பிய ரசிகர்கள் அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

கவுதம் கார்த்திக்:

தமிழ் சினிமாவில் அதிகமான வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் நவரச நாயகன் கார்த்திக். இவர் வித்தியாசமான பேச்சால் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் பட வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மூத்த மகனான கௌதம் கார்த்திக் தற்போது முன்னணி கதாநாயகனான வலம் வருகிறார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் படம் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகினார். நடித்த முதல் படத்திலேயே அசத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். ஆனால் அதற்கு பின் நடித்த எந்த படமும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பத்து தல, 1947 போன்ற படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது, அண்மையில் கவுதம் கார்த்திக் இன்ஸ்டா பக்கத்தில் லைவ்வில் பேசும் போது அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பினர். அதில் குறிப்பாக ஒருத்தர் கவுதம் கார்த்திக்கிடம் திருமணத்தை பற்றி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர் விரைவில் கல்யாணம் ஆகும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் தேவராட்டம் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவருக்கும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here