இனிதே முடிந்த கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமணம்.., marriage கிளிக்ஸ் வைரல்!!

0
இனிதே முடிந்த கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமணம்.., marriage கிளிக்ஸ் வைரல்!!
இனிதே முடிந்த கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமணம்.., marriage கிளிக்ஸ் வைரல்!!

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகராக சுற்றி வருபவர் தான் கெளதம் கார்த்திக். தற்போது இவர் நடிப்பில் பத்து தல, செல்லப்பிள்ளை, 1947, ஆய்த சத்தம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இப்படி ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும், மறுபக்கம் தேவராட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் காதல் வயப்பட்டு மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் அவர்கள் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். மேலும் நவம்பர் 28ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது என்றும் அறிவித்திருந்தனர். அவர்கள் திருமணத்திற்கு தயாரித்த பத்திரிகை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ரீச் ஆனது. இதனை தொடர்ந்து இன்று கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சொந்தக்காரர்கள் மற்றும் நெருங்கிய உறவுகள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்.., ஒரே படத்துல சாதிச்சிட்டாரே நம்ம பிரதீப்!!

மேலும் திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் முன்னர் கூறிய நிலையில், தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள் என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். தற்போது அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here