சூப்பர் ஸ்டார் வாரிசையும் விட்டு வைக்காத பயில்வான் ரங்கநாதன் – கோபத்தில் கொந்தளித்த பிரபலம்!!

0
சூப்பர் ஸ்டார் வாரிசையும் விட்டு வைக்காத பயில்வான் ரங்கநாதன் - கோபத்தில் கொந்தளித்த பிரபலம்!!

பிரபல யூட்யூப் விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் சீதாராம் படம் குறித்த கேள்விகளைக் கேட்டு, அவரை எரிச்சலடைய செய்துள்ளார்.

எரிச்சலில் நடிகர்:

பிரபல யூட்யூப் விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், கடந்த சில தினங்களாக நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இவர் அண்மையில் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி, படு கொச்சையாக பேசினார். இதனால் கொந்தளித்த நடிகை, கடற்கரையில் வாக்கிங் சென்ற இவரை மடக்கிப் பிடித்து வெளுத்து வாங்கினார்.

தற்போது,  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் சீதா ராமன் என்ற பான் இந்திய படத்தில் நடித்துள்ளார். இதன் பிரஸ்மீட் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பயில்வான், சீதாராமன் படத்தில் உங்கள் பெயர் ராம் என்றால், ராமம்ன்னா என்ன என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், படத்தின் பெயர் வைக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்பு தான் நான்  ஷூட்டிங் சென்றேன் என்றும், படத்தின் தலைப்பு குறித்த உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு இயக்குனர் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் குறுக்கிட்ட பயில்வான், என்னவென்றே தெரியாமல் படத்தில் நடித்தீர்களா? என காரசாரமாக கேள்வி எழுப்பினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரு துல்கர் சல்மானையும் விட்டு வைக்கலையா? என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here