சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரக்ஷிதா தற்போது தனது கணவரான தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிக்பாஸ் கடந்த சீசனில் ரக்ஷிதா போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், தற்போது அவரின் கணவரான தினேஷும் நடப்பு சீசனில் பங்கேற்று இரண்டு முறை கேப்டன் டஸ்க்கை வென்றுள்ளார். இந்நிலையில் தினேஷின் பெற்றோர்கள் ரக்ஷிதாவை குறித்து பேசியுள்ளனர்.

அதாவது ரக்ஷிதா குறித்து நாங்கள் தவறாக ஒரு போதும் பேச மாட்டோம்.அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் அவ்வளவு தான். மேலும் ரக்ஷிதா இவ்வளவு நாள் கோபத்துடன் இருக்கமாட்டார். ஆனால் இப்போது ஏன் அப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை. ரக்ஷிதா நல்ல பொண்ணு, அவங்க கிட்ட நல்ல கேரக்டர் இருக்கு. ஆனால் தற்போது தவறான வழிகாட்டுதல் கீழ் நடந்து வருகிறார் என்று கூறியுள்ளனர்.