போட்றா வெடிய., மிரட்டலான காம்போவில் உருவாகும் தனுஷ் ‘D 50’ படம்., லோகேஷை மிஞ்சிய தனுஷ் திட்டம்!!

0
போட்றா வெடிய., மிரட்டலான காம்போவில் உருவாகும் தனுஷ் 'D 50' படம்., லோகேஷை மிஞ்சிய தனுஷ் திட்டம்!!
போட்றா வெடிய., மிரட்டலான காம்போவில் உருவாகும் தனுஷ் 'D 50' படம்., லோகேஷை மிஞ்சிய தனுஷ் திட்டம்!!

இந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், பாடகர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக வட சென்னை படத்தின் பின்னணியை வைத்து D50 என்ற படத்தை இயக்கி அதில் தானே ஹீரோவாகவும் தனுஷ் நடிக்கயுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்க கமிட்டானத்தை தொடர்ந்து தற்போது எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதர்களாக நடிக்க உள்ளனர். மேலும் இதில் துஷாரா விஜயனும் கமிட்டாகியுள்ளார்.

காற்றுக்கென்ன வேலி நடிகருக்கு விரைவில் டும்டும்டும்., ரசிகர்கள் வாழ்த்து!!

இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள் கூட்டணியில் உருவாகும் இப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ, ஆர். ரஹ்மான் இசையில் அமைய இருக்கிறது. பொதுவாக இயக்குனர் லோகேஷ் தனது ஒரே படத்தில் பல பிரபல நடிகர்களை நடிக்க வைத்து மாஸ் காட்டி வருவது வழக்கம். தற்போது அதே ரூட்டை நடிகர் தனுஷும் இப்படத்தில் பாலோவ் செய்வதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here