தனுஷின் “வா வாத்தி” பாடலை அச்சு அசலாக பாடிய சிறுமி.., ட்விட்டரில் புகழாரம் சூடிய ஜிவி பிரகாஷ்!!

0
தனுஷின்
தனுஷின் "வா வாத்தி" பாடலை அச்சு அசலாக பாடிய சிறுமி.., ட்விட்டரில் புகழாரம் சூடிய ஜிவி பிரகாஷ்!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்:

கோலிவுட்டில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்து, தற்போது நாயகனாக ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் 13, ருத்ரன், இடி முழக்கம், ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இப்படி நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பல படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இவரது இசையில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற “வா வாத்தி” என்ற காதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த மாதிரி மட்டுமே பார்க்காதீங்க ஷிவானி ப்ளீஸ்.., சுக்குநூறாய் உடைந்த இளவட்டங்கள்!!

அதாவது அண்மையில் வெளியான வா வாத்தி பாடலை மேகனா என்ற குழந்தை அச்சு அசலாக பாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த விடியோவிற்கு கேப்ஷனாக மேகனா, மிக நன்றாக பாடியிருக்கிறார் என்றும் என்ன ஒரு அற்புதம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here