தனுஷின் துள்ளல் ஆட்டத்துடன் வெளியான “நாடோடி மன்னன்” பாடல்.., இணையத்தில் லைக்ஸ் குவியும் வீடியோ!!

0
தனுஷின் துள்ளல் ஆட்டத்துடன் வெளியான
தனுஷின் துள்ளல் ஆட்டத்துடன் வெளியான "நாடோடி மன்னன்" பாடல்.., இணையத்தில் லைக்ஸ் குவியும் வீடியோ!!

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் சாங் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்:

சினிமாவில் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் வா வாத்தி என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

“போலா” பெயரில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

அதாவது நடிகர் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ள வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடலை யுகபாரதி எழுதிய நிலையில் அந்தோனி தாசன் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஜி வி பிரகாஷின் மெட்டுக்கு தனுஷ் துள்ளலாக ஆட்டம் போடும் காட்சியில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் அந்தோனி தாசன் பங்குபெற்று நடித்துள்ளனர். இப்பாடல் வெளியானதையடுத்து தனுஷ் ரசிகர்கள் பாடலை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here