“வா வாத்தி” பாடலுக்கு டஃப் கொடுக்க வரும் செகண்ட் சிங்கிள் சாங்.., வெளியான மாஸ் அப்டேட்!!

0
"வா வாத்தி" பாடலுக்கு டஃப் கொடுக்க வரும் செகண்ட் சிங்கிள் சாங்.., வெளியான மாஸ் அப்டேட்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

வாத்தி திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அது போக சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் “வா வாத்தி” என்ற காதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதில் காதல் செடியை வளர்த்தது. தற்போது இந்த பாடலை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி வருகின்றனர்.

சிம்பு பட வில்லனுக்கு நேர்ந்த சோகம்., கதறி அழுத பரிதாபம்! என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில் வாத்தி படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் செகண்ட் சிங்கிள் சாங் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது என்று ஜி..வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள், வெயிட்டிங்கில் வெறியாகி கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here