விஜய் விட்டதை தைரியமாக கையில் எடுக்கும் நடிகர் தனுஷ் – உங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான்!!

0

நடிகர் தனுஷ் தான் நடிக்க உள்ள படத்திற்கு வைத்துள்ள டைட்டில் ஏற்கனவே நடிகர் விஜய் தன் படத்திற்கு வைக்க இருந்தது என்றும், அதில் இருந்த பிரச்சனை காரணமாக அதை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனுஷ்:

நடிகர் தனுஷ் தற்போது இந்தியில் வெளிவந்துள்ள அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வேற லெவல் ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, இவர் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தமிழில் இந்த படத்திற்கு வாத்தி என்றும் தெலுங்கில் சார் எனவும் இதற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கு முன்னதாக வாத்தி என்று தான் பெயர் வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால், அதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அதை தவிர்த்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர் விட்ட அந்த டைட்டிலை நடிகர் தனுஷ் கையில் எடுத்துள்ளதால் உங்களுக்கு ரொம்ப தில்லு தலைவா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here