மீண்டும் தெலுங்கில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷ் – புஷ்பா இயக்குனருடன் மாஸ் கூட்டணி!!

0
dhanush
dhanush

வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேட்ட அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். மேலும் இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கில் முதல் முதலாக அவர் நடிக்க இருக்கும் படம் வாத்தி. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழி படமாக வெளியாக உள்ளது.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனுஷ் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷுடன் இணைய உள்ளராம். அதை கேள்வி பட்ட அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here