இவங்க இல்லைனா, எப்பவோ காணாமல் போய் இருப்பேன் – திடீரென பழசை நினைத்து உருகும் தனுஷ்!!

0
பிரபல நடிகர் தனுஷ் இப்படி ஒரு Fraud தனம் செய்தவரா?? வெளியான உண்மை சம்பவம்!!
இவங்க இல்லைனா, எப்பவோ காணாமல் போய் இருப்பேன் - திடீரென பழசை நினைத்து உருகும் தனுஷ்!!

தனுஷ், தான் அறிமுகமான புதிதில் நடந்த பழைய கதை ஒன்றைப் பற்றி சுவாரசியமாக பேசி உள்ளார். மேலும் இவர் இல்லையெனில், நான் காணாமல் போய் இருப்பேன் என வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தனுஷ் வெளிப்படை :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது விவாகரத்து முடிவை அறிவித்த பின் கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதன் மூலம் தனுஷ் தனது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து இவர் நடிப்பில், உருவாகியுள்ள நானே வருவேன் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இது குறித்து அண்மையில் பேசிய தனுஷ், தனது துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் யுவன் தனக்கு அறிமுகமானார்.

அந்தக் காலகட்டத்தில், இவரின் இசை பல அறிமுக நாயகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது. என் முதல் படத்திற்கு இவர் மட்டும் இல்லையென்றால், என் வாழ்க்கை அங்கேயே முடிந்திருக்கும். தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமைந்திருப்பது, வெற்றியை உறுதி செய்துள்ளது என்று தன் பழைய நினைவுகளை சுவாரஸ்யமாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here