மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – படத்தில் இணையும் விஜய் டிவி காமெடி பிரபலம்!!

0
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - படத்தில் இணையும் விஜய் டிவி காமெடி பிரபலம்!!
ஹாலிவுட் வரை சென்று கலக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு தெரியுமா - அதிர வைக்கும் தகவல்!

நடிகர் தனுஷ், தான் இயக்கிய பா. பாண்டி என்ற திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனராகும் தனுஷ் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாறன் திரைப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. தொடர்ந்து தன் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகர் தனுஷ், மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர், இயக்குனராக முதன் முதலில் இயக்கிய படம் பா.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து, இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்கும் இந்த படத்தில், விஜய் டிவி காமெடி பிரபலம் ராமர் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைய உள்ளதாக பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அடுத்தடுத்த அப்டேட்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here