தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தம்பதியருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்களாக அதே லவ்வோட ட்ராவலான அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக ஒருவொருக்கொருவர் விட்டு விலகினர். இதனால் சினிமா உலகம் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கின.
அவர்களை சேர்த்து வைக்க ரஜினி எவ்வளவோ போராடி பார்த்தும் முடியாமல் போனது. தற்போது அவர்கள் இருவரும் தங்களது கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் என்னதான் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இருவரும் மண ரீதியாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்க முறைப்படி இன்னும் டைவர்ஸ் வாங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு சிலர் ரசிகர்கள் அவர்கள் விரைவில் சேருவார்கள் என்று கூறி வருகின்றனர். மற்றும் பலர் இவர்கள் சேர வாய்ப்பு இருக்கா இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.