
நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தை குறித்த இணையதளத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ்:
பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக ஜொலித்து வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட நூறு கோடி வசூலித்து சாதனை படைத்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், அசுரன் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிகளை வசூலித்த நிலையில் தற்போது வாத்தி திரைப்படமும் 100 கோடியை வசூலித்து தனுசுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படைப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் 50-வது திரைப்படம் குறித்து இணையதளத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இத தான்யா எதிர்பார்த்தோம்.., விரைவில் ரெடியாகும் தனி ஒருவன் 2 – சூப்பர் அப்டேட் சொன்ன மோகன் ராஜா !!
அதாவது சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் இவர் இயக்கிய நடித்த பவர் பாண்டி திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.