நாளை முதல் நடிகர் தனுஷின் ‘வாத்தி’ ரைடு ஆரம்பம்…, ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்…,

0
நாளை முதல் நடிகர் தனுஷின் வாத்தி' ரைடு ஆரம்பம்..., ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்...,
நாளை முதல் நடிகர் தனுஷின் வாத்தி' ரைடு ஆரம்பம்..., ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்...,

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி ட்ரைலர்

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் ட்ராமா திரைப்படம் ‘வாத்தி’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

“ஜெயிலர்” ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் செய்த காரியம்..,வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

அதற்கு முன்னதாகவே, ‘வாத்தி’ திரைப்படத்தின் ‘ஒரு தல காதல தந்த’ பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்த நிலையில், ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here