வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷ்க்கு வணக்கத்த போடு.., ரசிகருக்கு வாய்ப்பு கொடுத்த சிம்பு!!

0
வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷ்க்கு வணக்கத்த போடு.., ரசிகருக்கு வாய்ப்பு கொடுத்த சிம்பு!!
வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷ்க்கு வணக்கத்த போடு.., ரசிகருக்கு வாய்ப்பு கொடுத்த சிம்பு!!

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தில் அவரது வெறித்தனமான ரசிகனும், நகைசுவை நடிகருமான கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கூல் சுரேஷ்:

சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் அமோக வெற்றியை அடைந்தாலும், படத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சென்றவர்களில் ஒருவர் தான் நடிகர் கூல் சுரேஷ். அதாவது “வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்த போடு” என்ற வசனம் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பரவினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த வசனத்தை ஒவ்வொரு படத்தின் விமர்சனத்தின் போது சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் கூறும் வசனத்திற்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சூழ்நிலையில் வெந்து தணிந்தது காடு முதல் ஷோக்கு சென்ற கூல் சுரேஷின் கார் கண்ணாடியை சிம்பு ரசிகர்கள் உடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடாலடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – முழு விபரம் உள்ளே!!

சமீபகாலமாக நடிகர் கூல் சுரேஷ் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வேதனை பட்டு வந்தார். இந்நிலையில் அவரின் கவலையை போக்கும் விதமாக நடிகர் சிம்பு ஒரு செயலை செய்துள்ளார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகனான கூல் சுரேஷ்க்கு அவரது அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த தகவலை சிம்புவே அண்மையில் கூறினார். மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here