Thursday, April 25, 2024

நிஜ வாழ்க்கையில் தாத்தாவாகும் சீயான் விக்ரம் – குடும்பத்தினர் மகிழ்ச்சி..!!

Must Read

பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா கருவுற்றிருப்பதால், நிஜ வாழ்க்கையில் தாத்தா ஆகிறார் விக்ரம். இதனால் பெரும் மகிழ்ச்சியில் விக்ரமின் குடும்பத்தினர் உள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் தாத்தா:

பல வேடங்களில் இதுவரை நடித்துள்ள விக்ரம் தற்போது நிஜ வாழ்க்கையில் தாத்தா ஆகிறார். விக்ரமின் மகளான அக்ஷிதா கடந்த 2017 – ம் ஆண்டு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேரனான மனு ரஞ்சித்தை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது.

இந்தியாவில் வெளியாகும் OnePlus Nord ஸ்மார்ட்போன் – என்னென்ன சிறப்பம்சங்கள்??

Vikram at his daughter Akshita Reception
Vikram at his daughter Akshita Reception

இந்நிலையில் அக்ஷிதா இப்போது கருவுற்றிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விக்ரமின் குடும்பத்தினர் கொண்டாட்டம்:

இதனால் விக்ரமின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை கொண்டாட விழா ஒன்று நடத்த உள்ளதாகவும், கொரோனா அவசர நிலையில் அவ்வாறு கொண்டாட இயலாத சூழலால், நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chiyaan Vikram
Chiyaan Vikram

இதனை அறிந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், விக்ரம் மற்றும் அவரது மகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

விக்ரமின் அடுத்த படங்கள்:

நடிகர் விக்ரம் நடித்து வந்த கோப்ரா படம் முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தில் உள்ள முதல் பாடல், ஐ மற்றும் இராவணன் ஆகிய படங்களுக்கு அடுத்து, மூன்றாவது முறையாக விக்ரம் மற்றும் ரகுமானை இணைத்துள்ளது என்று இப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய அணி இர்பான் பதான், எதிரி வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் படத்தில் விக்ரம் அடுத்து நடிக்க உள்ளார் மற்றும் அதில் அவரது மகனான துருவ் விக்ரமும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -