நடிகர் பரத் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட ரகளை – கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! படக்குழுவின் அதிரடி முடிவு!!

0
நடிகர் பரத் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட ரகளை - கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! படக்குழுவின்  அதிரடி முடிவு!!
நடிகர் பரத் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட ரகளை - கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! படக்குழுவின்  அதிரடி முடிவு!!

நடிகர் பரத் நடித்து வரும், ஆக்சன் 22 மலையாள படத்தின் ஷூட்டிங் நிகழ்வின் போது, அப்பகுதி மக்கள் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டதால் படத்தின் ஷூட்டிங் பாதிலேயே நிறுத்தப்பட்டது.

பாதிலேயே நிறுத்தம்:

கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் என்ற படத்தின் மூலம் நடிகராக கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து, செல்லமே, எம் மகன், வெயில், பழனி, நேபாளி, சேவல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தற்போது, இவர் ஆக்சன் 22 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், தாய்லாந்து குகையில் சிக்கிய மாணவர்கள் சிலர் எப்படி மீட்கப்பட்டவர்கள் என்பதன் உண்மை சம்பவத்தை வைத்து தயாராகி வருகிறது.

இந்த படத்தை, அந்த உண்மை சம்பவம் நடந்த இடத்தில் வைத்து எடுக்க படக்குழு முடிவு எடுத்தது. இதையடுத்து முறையாக அனுமதி வாங்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அப்பகுதி மக்கள், படக்குழுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், கார் உள்ளிட்ட பொருட்களின் மீது கல்லெறிந்து சேதப்படுத்தினர். இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here