வோர்ல்டு ரெகார்டுக்கு ஸ்கெட்ச் போட்ட பாக்யராஜ் – 68 வயசுலயும் கெத்த மெயின்டைன் பண்றீங்களே!!

0

90ஸ்களில் முன்னணி நடிகராக திகழ்ந்த பாக்யராஜ், வெறும் 81 நிமிடங்களில் உருவான ஒரு படத்தில் நடித்து உலக சாதனைக்கு தயாராகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உலக சாதனை:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகரும்,இயக்குநருமான பாக்யராஜ். இவர் தற்போது,தனது மகனுடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது,68 வயதான இவர், 3.6.9 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்டு உலக சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில்,பாக்யராஜுடன் இணைந்து,படத்தின் தயாரிப்பாளர் பி ஜி எஸ் மற்றும் அஜய் கண்ணன், சக்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங்,புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பத்தில் தொடங்கி 81 நிமிடங்களில் முடிந்தது.

இதை அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும்,வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைக்காக,நாலேஜ் இன்ஜினியரிங் அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் பரிந்துரை செய்தார். இந்த படத்தின் நேரம் 2 மணி நேரம் எனவும்,இது விரைவில் தியேட்டரில் ரீலீஸாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here