எப்பவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.., உங்களுக்கு வேணுன்னா புது பட்டத்த கண்டுபிடிங்க.., பயில்வான் ஆவேசம்!!

0
எப்பவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.., உங்களுக்கு வேணுன்னா புது பட்டத்த கண்டுபிடிங்க.., பயில்வான் ஆவேசம்!!
எப்பவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.., உங்களுக்கு வேணுன்னா புது பட்டத்த கண்டுபிடிங்க.., பயில்வான் ஆவேசம்!!

சமீபத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்து பத்திரிகையாளர் பயில்வான் தடாலடியான ஒரு பதிலை கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்:

தமிழ் சினிமாவில் நுழைந்து 40 வருடங்களுக்கு மேல் ஆன பிறகும், தற்போது வரை முன்னணி இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அதனால் தான் இவரை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது விஜய் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், விஜய் இப்ப சூப்பர் ஸ்டார் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். அவரை தொடர்ந்து சரத்குமார், பத்திரிகையாளர் பிஸ்மி ஆகியோர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதால் ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். மேலும் இந்த சர்ச்சை குறித்து விஜய் மற்றும் ரஜினி வாயை திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் பேசியுள்ளார்.

உன்ன அடிச்சா எனக்கு தான் கேவலம்.., பாவனியை அசிங்கப்படுத்தும் விக்ரமன்.., Unseen வீடியோ வைரல்!!

அவர் கூறியதாவது, நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன், புரட்சி திலகம் என்றால் அது எம்ஜிஆர், காதல் மன்னன் என்றால் அது ஜெமினி கணேசன் தான். அது போல சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று கூறியுள்ளார். மேலும் முதலில் படத்தை தான் காப்பி அடித்தீர்கள். இப்போது கேவலம் பட்டத்தையும் காப்பி அடிக்கீர்களா என்று விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுக்கு சிலர் ஆதரவு வேற கொடுக்குறாங்க. சொந்தமா யோசிச்சு ஒரு பட்டத்தை கொடுங்க என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here