பிரபல சேனலுக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஸ்லீப்பிங் ஸ்டார்.., அப்போ TRP எகிற போகுது!!

0
பிரபல சேனலுக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஸ்லீப்பிங் ஸ்டார்.., அப்போ TRP எகிற போகுது!!
பிரபல சேனலுக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஸ்லீப்பிங் ஸ்டார்.., அப்போ TRP எகிற போகுது!!

பிரபல தொலைக்காட்சி டிவியில் ஒளிபரபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் புகழ், அஸ்வின் குமார் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஸ்வின்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் அஸ்வின் குமார். இவர் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய், FIR போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது காமெடி நடிகை கோவை சரளாவுடன் செம்பி திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஸ்வின் குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வரும் ஊ சொல்றியா.., ஊஊ சொல்றியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முடிவுக்கு வரும் 2 டாப் தொடர்கள்., விரைவில் கிளைமாக்ஸ் – திடீர் முடிவால் இல்லத்தரசிகள் ஷாக்!!

சமீபத்தில் அவர் அந்த சோவில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவருடன் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி அஸ்வின் குமார் குக் வித் கோமாளி 2nd சீசனில் பிரபலமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் . அவர் ரொம்ப நாள் கழித்து மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here