எனக்கு விசில் பறந்தது இதுதான் முதல் முறை.. மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்!!

0
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் இணைந்து  தயாரித்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த (ஜனவரி 25) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அனுபவம் மற்றும் கருத்து குறித்து சில வார்த்தைகளை நடிகர் அசோக் செல்வன் பகிர்ந்துள்ளார்.
அதில், சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்து ப்ளூ ஸ்டார் படத்தில் இருக்கும், இந்த படத்தில் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். நான் சினிமாவுக்குள் வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது, இது எனக்கு 19-வது படம். முதல் முறையாக எனது படத்தில் ஹீரோ இண்ட்ரோவுக்காக விசில் பறந்ததை பார்த்தேன். இதுக்கு முன்னதாக எந்த படத்திலும் இப்படி இருந்ததில்லை என நெகிழ்ச்சியுடன் தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here