
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். என்ன தான் இவர் பான் இந்திய நடிகராக இருந்தாலும் இவர் அதிகமாக தமிழ் படங்களிலே நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் இவர் நடித்த கில்லி, பகவதி, உத்தம புத்திரன், தமிழன், பாபா உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. அவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இப்படி இருக்கையில் , அவர் தற்போது கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இன்று இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி உள்ளிட்ட பாடப்பிரிவும் நீக்கப்படாது., சரண்டர் ஆன அண்ணா பல்கலை.!!!
இந்த தம்பதியினர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி-யின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.