அட கொடுமையே.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்ந்த நடிகர் அருண் விஜய்!!

0

நடிகர் அருண் விஜய் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வருமாறு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய்:

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கு பூர்வி, அர்னவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா பெருகி வரும் நிலையில் அந்த தொற்று திரை உலக நட்சத்திரகளையும் விட்டுவைக்கவில்லை. முதலில் நடிகர் கமல் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணம் அடைந்து விட்டனர். இந்த வரிசையில் தற்போது நடிகர் அருண் விஜய் இணைந்து விட்டார். மேலும் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா உள்ளதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாடுகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here