
சன் டிவியின் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி என்ற சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவ் என்பவரை 5 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு, தான் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தன் கணவர் தன்னை துன்புறுத்துவதாகவும் அர்னவ் மீது திவ்யா புகார் அளித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அர்னவ் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் திவ்யா அழகான பெண் குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தையை அர்னவ் சந்திக்க வேண்டும் என்றும் மீண்டும் இருவரும் அந்த குழந்தைக்காக இணைய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தொடர் தோல்வியால் துவண்டு கெடுக்கும் சமந்தா.., எடுக்கும் அடுத்த முயற்சி.., வெற்றி பெறுவாரா??
இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அர்னவ் கூறிய விஷயங்கள் ரசிகர்களை அதிச்சிக்குள்ளாகியுள்ளது. அதாவது இவருடைய குடும்பம் நாசமாக போகும் என சாபம் விட்டு மண்ணை வாரி அவர் மீது திவ்யா தூற்றி விட்டு சென்றுள்ளாராம். இதனால் ஒருபோதும் குழந்தையை எனக்கு காட்டு என கேட்க மாட்டேன் என அர்னவ் கூறியுள்ளார். இவரது இருவரும் தங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து ஈகோவுடன் இருந்து வருகின்றனர்.