விஜயை தொடர்ந்து ரஜினியை மிரட்ட வரும் அர்ஜுன்….,இந்த காம்போ ஹிட் கொடுக்குமா?…,

0
விஜயை தொடர்ந்து ரஜினியை மிரட்ட வரும் அர்ஜுன்....,இந்த காம்போ ஹிட் கொடுக்குமா?...,
விஜயை தொடர்ந்து ரஜினியை மிரட்ட வரும் அர்ஜுன்....,இந்த காம்போ ஹிட் கொடுக்குமா?...,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கை கோர்க்க இருக்கிறார்.

தற்போது, நடிகர் விஜயை வைத்து ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் விரைவில் தனது அடுத்த படத்தை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாதா’ வாக நடிக்கும் முக்கிய பாலிவுட் பிரபலம்…..,படமாகும் கங்குலியின் வாழ்க்கை…..,

தற்போது, ‘லியோ’ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடித்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திலும் அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ். தவிர, அர்ஜுன் இந்த இரண்டு படங்களிலும் வில்லனாக நடிப்பதால் இதில் ஏதேனும் விஷயம் இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதைத் தாண்டி, ரஜினிகாந்த் – அர்ஜுன் காம்போவை திரையில் பார்க்கவும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here