பிக் பாஸ் பிரபலம் ஆரவ் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!

0

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் ஒன்றின் டைட்டில் வின்னர் ஆரவின் தந்தை நிலாமுதீன் காலமானார் என்ற தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் பிரபலம் ஆரவ்:

துணை நடிகர் மற்றும், விளம்பர மாடலாக இருந்தவர் தான் நடிகர் ஆரவ். பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட ஆரவ்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். ஆர்மி எல்லாம் துவங்கப்பட்டு அதிக வாக்குகள் பெற்று டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நடிகை ஓவியாவுடன் காதல், மருத்துவ முத்தம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் குறையவே இல்லை என்றே கூறலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக்பாஸுக்கு பின் மார்க்கெட் ராஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ராஜா பீமா, மீண்டும் வா அருகில் வா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஓவியாவுடனான காதலில் விரிசல் ஏற்பட்டு சமீபத்தில் ராஹி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

‘நீங்கள் நினைத்தது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும்’ – விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி!!

இந்நிலையில் ஆர்வின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை 1.30 க்கு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் தமிழ் சீசன் 3ன் போட்டியாளரும், நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசனும் கனடாவில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here