சினிமாவில் சூப்பர் ஸ்டார்னா நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா?.., நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!!

0
சினிமாவில் சூப்பர் ஸ்டார்னா நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா?.., நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!!
சினிமாவில் சூப்பர் ஸ்டார்னா நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா?.., நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!!

தற்போதைய காலகட்டத்தில் நடிகராகவும், அரசியல் சாணக்கியராகவும் கொடிகட்டி பறந்து வருபவர் தான் சீமான். இவர் நடிப்பில் வெளியான அமைதிப்படை, பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக அளவு பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பல மேடைகளில் இவர் நடிகர் விஜய் தனக்கு தம்பி என்று புகழாரம் பாடி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, நடிகர் விஜய் தற்போது சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பதற்கு காரணம் அவரின் விடாப்பிடியான முயற்சி மட்டுமே. தம்பி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இதை கேட்ட ரஜினி ரசிகர்கள் சீமான் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் சீமான் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர், தமிழ் திரையுலகில் நடிக்க வந்தால் மட்டும் போதும்.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிக் பாஸ் ஜனனி? அவரே கொடுத்த சீக்ரெட் அப்டேட்!!

அவர்களுக்கு நாட்டை ஆளும் தகுதி தங்களுக்கு வந்து விட்டது என்று புரிந்து கொள்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் சீமான் மறைமுகமாக விஜய்யை சொல்கிறாரோ என்று இணையத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சீமான் பேசியது சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here