சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்போதும் தளபதி ஆசைப்படமாட்டாரு.., நடிகர் ஆனந்தராஜ் ஓபன் டாக்!!

0
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்போதும் தளபதி ஆசைப்படமாட்டாரு.., நடிகர் ஆனந்தராஜ் ஓபன் டாக்!!
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்போதும் தளபதி ஆசைப்படமாட்டாரு.., நடிகர் ஆனந்தராஜ் ஓபன் டாக்!!

தமிழ் திரையுலகில் நுழைந்த முதல் படத்திலே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று, தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை கார்த்தியை வைத்து தோழா படத்தை கொடுத்த வம்சி இயக்கியுள்ளார். அதுபோக ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தளபதியின் மாஸான நடனம் மற்றும் பக்க கமர்ஷியல் படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சோசியல் மீடியாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று ரசிகர்கள் பரவலாக பேசி வரும் நிலையில், அது ரஜினி ரசிகர்களிடையே பெரிய பிரச்சனையை கிளப்பி வருகிறது.

விஜய் சேதுபதி குறித்து ஏடிகே சொன்ன சின்ன சின்ன விஷயங்கள்.., அந்த அளவுக்கு மனுஷன் இருந்து இருக்காரே!!

மேலும் வாரிசு படத்தில் நடித்த சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யை குறித்து நடிகர் ஆனந்தராஜ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு ஆசைப்பட மாட்டார். ஏனென்றால் தற்போது நடிகர், நடிகைகள் படத்தை வேண்டாம் என்று இருக்கிறார்கள். மேலும் தனிப்பட்ட மனிதனாக தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்பமாட்டார். என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here