விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பச்சன்.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

0
விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பச்சன்.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பச்சன்.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சமீபத்தில் விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன் உடல்நிலை குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அமிதாப் பச்சன்

பாலிவுட்டில் மூத்த நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அமிதாப் பச்சன். அவருக்கு 80 வயது ஆன போதிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் Project K படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுபோக நடிகை தீபிகா படுகோனும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹைதராபாத்தில் Project K படத்தின் ஷூட்டிங்கில் திடீரென நடந்த விபத்தில் அமிதாப் படுகாயம் அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு சண்டை காட்சியின் போது எனக்கு காயம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருக்கிறேன்.

‘அயோத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடும்..,.கற்பூரம் அடித்து சத்தியம் செய்த கூல் சுரேஷ்.., வீடியோ வைரல்!!

ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். மேலும் மூச்சு விடும்போதும், நகரும் போது வலி அதிகமாக இருக்கிறது. சரியாக பல வாரங்கள் ஆகலாம். வலி குறைய மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் முழுவதும் குணமடைவேன். மேலும் எனக்காக பிரார்த்தனை செஞ்ச எல்லோருக்கும் நன்றி. உங்களுடைய அன்பை பார்த்து நான் வியக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here