கடல் கடந்தும் மாஸ் காட்டும் புஷ்பா படம்.,எப்படின்னு நீங்களே பாருங்க!மாஸ் காட்டுறீங்களே பா!!

0
கடல் கடந்தும் மாஸ் காட்டும் புஷ்பா படம்.,எப்படின்னு நீங்களே பாருங்க!மாஸ் காட்டுறீங்களே பா!!
கடல் கடந்தும் மாஸ் காட்டும் புஷ்பா படம்.,எப்படின்னு நீங்களே பாருங்க!மாஸ் காட்டுறீங்களே பா!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

புஷ்பா திரைப்படம்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது . குறிப்பாக ஊ சொல்றியா.., ஊஊ சொல்றியா என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் நடித்த இந்த படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கின்றனர். மேலும் டிசம்பர் 1ம் தேதி மாஸ்க்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின் பீட்டர்ஸ்பர்கிலும் படத்தின் பிரீமியர் காட்சிகள் திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.

கோலாகலமாக தொடங்கும் 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.., வெளியான முக்கிய அப்டேட்!!

இதில் பங்கேற்க அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம் டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இந்த படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு இப்படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here