“விடாமுயற்சி” படத்துக்காக லண்டனுக்கு பறந்த அஜித் குமார்.., வெளியான சூப்பர் அப்டேட்!!!

0
"விடாமுயற்சி" படத்துக்காக லண்டனுக்கு பறந்த அஜித் குமார்.., வெளியான சூப்பர் அப்டேட்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விட முயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது. படத்தின் ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்றார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தள்ளிப் போயிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் இறுதி வாரத்தில் தான் தொடங்கப் போகிறாராம் மகிழ் திருமேனி. விடாமுயற்சி படம் தொடர்பாக லண்டனுக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் அஜித் குமார். சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கப் போகிறாராம். அதுமட்டுமின்றி படத்தை 2024ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பை துவங்குவதற்கான வேலையில் மகிழ் திருமேனி ஈடுபட்டுள்ளார்.

“பொம்மை” மீது மோகம் கொண்ட எஸ்.ஜே. சூர்யா – வெளியான டிரைலர் வீடியோ!!

மேலும் அஜித் இப்படத்தை முடித்துவிட்டு பைக் டூர் செல்ல இருப்பதால் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க பிளான் போட்டுள்ளாராம். அக்டோபரில் ஷூட்டிங் முடிந்து விடும் என்றால், அப்போது எதற்கு கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள், பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாமே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here