அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., “துணிவு” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு!!

0
அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்..,
அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., "துணிவு" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். கடந்த மாதம் 11ம் தேதி இவர் நடித்த துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கியுள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. அதுபோக மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுவரை துணிவு திரைப்படம் 220 கோடிகளை கலெக்ட் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 115 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துணிவு படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்திற்கு பேச்சுவார்த்தை நடத்திய விக்னேஷ் சிவன்.., Final முடிவு இது தானா?

அதாவது துணிவு திரைப்படத்தை நெட் பிலிக்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நெட் பிலிக்ஸ் ஓடிடியில் வருகிற 8ம் தேதி துணிவு திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here