துணிவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்.., இனி நம்ம ரூட்டு கிளியர் தான்.. அவரே வெளியிட்ட பதிவு!!

0
துணிவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்.., இனி நம்ம ரூட்டு கிளியர் தான்.. அவரே வெளியிட்ட பதிவு!!
துணிவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்.., இனி நம்ம ரூட்டு கிளியர் தான்.. அவரே வெளியிட்ட பதிவு!!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார்:

தமிழ் திரையுலகில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்த்து துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்து, அடுத்த கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் துணிவு படத்தை குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நேற்று துணிவு படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சும்மா தாறுமாறாக இருக்கும் அஜித் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதுமட்டுமின்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் மூன்றாவது போஸ்டரை ஸ்டோரியாக வெளியிட்டுள்ளார். இப்படம் முடிந்தால் தனது படத்தின் ஷூட்டிங்கை ஸ்டார்ட் செஞ்சுறலாம் என்ற எண்ணத்தில் பதிவிட்டிருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here