நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!

0
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!

கடந்த வாரம் முழுவதும் நடிகர் அஜித் குறித்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்கி வந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார்:

கோலிவுட்டில் தனக்குனு ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித்குமார். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தாலும் சமீபகாலமாக வெளியான எந்த திரைப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த வகையில் கடைசியில் வெளியான வலிமை ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது நடிகர் அஜித் குமார் ஏகே 61 படத்தில் நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நடிகர் அஜித் குமார் தனக்கு பிடித்த பைக்கில் லடாக்கில் இருந்து இமய மலையை நோக்கி இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகசங்கள் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் நடிகர் அஜித் குறித்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.இந்நிலையில் அஜித் செல்லும் சுற்றுலா பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணம் செய்து வருகிறார் .

இதற்கு நன்றி கூறும் விதமாக இணையத்தில் மஞ்சு வாரியர் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் ராணுவ தலங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் புத்தர் கோவிலுக்கு சென்று, புத்த சன்னிதானத்தை சுற்றி வந்து வழிபடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here