அஜித்தின் AK 63 படத்தின் முக்கிய அப்டேட்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
அஜித்தின் AK 63 படத்தின் முக்கிய அப்டேட்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
அஜித்தின் AK 63 படத்தின் முக்கிய அப்டேட்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகர் அஜித்குமார். போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்தார் அஜித். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை இந்த திரைப்படம் 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கூடிய விரைவில் 150 கோடியை எட்டும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ஏகே 62 படத்தில் நடித்து வருகிறார் அஜித். அதுபோக இப்படத்தில் நயன்தாரா, சந்தானம், அரவிந்த்சாமி, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வலிமை படத்துல அஜித்துக்கு அம்மாவாக நான் நடிக்க இருந்துச்சு.., வாரிசு பட நடிகை ஓபன் டாக்!!

இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்க இருக்கும் ஏகே 63 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 வை தொடர்ந்து, அஜித்தின் ஏகே 63 யை அட்லீ, விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா மற்றும் சுகுமார் ஆகியோரில் ஒருவர் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அட்லீ தான் இயக்க போகிறார் என்று ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here