நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் துணிவு படத்தை தொடர்ந்து அடுத்த படமான ஏகே 62 குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித் -ஏகே 62:
கோலிவுட் வட்டாரங்களில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, கவின், யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு, விஜய் நடிக்கும் வாரிசுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘லைக்கா நிறுவனம்’ தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
வனிதாவின் மொத்த கஷ்டத்துக்கும் காரணம் இவங்க தானா?? இருந்தாலும் விஜயகுமார் அப்டி இருக்க கூடாது!!
இந்நிலையில் ஏகே 62 படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், அதற்குள் ஏகே 62 படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் அதிக தொகையை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.