வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த நடிகர் அஜித் – தங்கள் கண்களை நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள்!!

0
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

நடிகர் அஜீத் தன்னுடைய வாட்ஸ் அப்பில் வைத்துள்ள ஸ்டேட்டஸ் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஸ்டேட்டஸ் போட்ட அஜித் :

நடிகர் அஜித், இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம், வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரோடு இந்தப் படத்தில் நாயகியாக ஹீமா குரேஷி, மற்றும் வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளனர். இவரோடு இந்தப் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் பானு பிரகாஷ் அவர்களின் மகன் ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அனுமதி பெற்று அதை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “ஏழை பணக்காரர் நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடுகள் பணத்தால் வந்ததே தவிர, குணத்தால் வந்ததில்லை ” என்று போடப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், இதை செம ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here