துணிவா? வாரிசா?.., டாஸ் போட்டு பிரபல திரையரங்கை கைப்பற்றிய அந்த படம்.., நிர்வாகம் எடுத்த முடிவு!!

0
துணிவா? வாரிசா?.., டாஸ் போட்டு பிரபல திரையரங்கை கைப்பற்றிய அந்த படம்.., நிர்வாகம் எடுத்த முடிவு!!
துணிவா? வாரிசா?.., டாஸ் போட்டு பிரபல திரையரங்கை கைப்பற்றிய அந்த படம்.., நிர்வாகம் எடுத்த முடிவு!!

தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கும் டாப்பிக் என்றால் அது வாரிசு-துணிவு திரைப்படங்கள் பற்றி தான். தமிழ் இரண்டு உச்சத்தை தொட்ட நடிகர்களாக விளங்குபவர் தான் விஜய் மற்றும் அஜித். இவர்கள் தற்போது போது நடித்து முடித்த வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்கள் நாளை மோத இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தமிழ்நாட்டில் 600 தியேட்டர் துணிவுக்கும் 300 தியேட்டர் வாரிசுக்கும் ஒதுக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தில் ராஜு உதயநிதி ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்தி சரிசமமாக தியேட்டர்களை பிரித்துள்ளனர். மேலும் நாளை அதிகாலை 1 மணிக்கு துணிவும், அதிகாலை 4 மணிக்கு வாரிசும் வெளியாக இருக்கிறது.

குளிர் பிரதேசத்தில் குதூகலமாய் நியூ Year ரை கொண்டாடிய பிரியங்கா மோகன்., ட்ரெண்டிங்காகும் கலக்கல் வீடியோ!!!

நேரம் நெருங்க நெருங்க இரு தரப்பு ரசிகர்களிடையே பலத்த உற்சாகம் ஏற்ப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தான் தியேட்டருக்கு கட்டி நாறுகிறார்கள் என்று பார்த்தால் அந்தமான் தீவிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் தியேட்டருக்காக அலப்பறை செய்து வருகின்றனர். அதாவது அந்தமான் தீவில் மிகவும் பேமஸ் திரையரங்கம் ஒன்றில், மொத்தம் 3 ஸ்கிரீன்கள் இருக்கிறது.

அதில் முதல் ஸ்கிரீன் துணிவுக்கும், இரண்டாவது ஸ்க்ரீன் வரிசுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது ஸ்கிரீன் எந்த படத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். அப்போது 3 வது ஸ்க்ரீன் யாருக்கு என்று தியேட்டர் நிர்வாகம் முன்னிலையில் அஜித், விஜய் ரசிகர்கள் டாஸ் போட்டு முடிவு செய்தனர். அந்த டாசில் அஜித் ரசிகர்கள் வென்ற நிலையில், மூன்றாவது ஸ்க்ரீனில் துணிவு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here