விடாமுயற்சிக்கு கெடு வைத்த நடிகர் அஜித்…,  வெளியான முக்கிய அப்டேட்!!

0
விடாமுயற்சிக்கு கெடு வைத்த நடிகர் அஜித்…,  வெளியான முக்கிய அப்டேட்!!
கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.
அதாவது விடாமுயற்சி திரைப்படம் துவங்க தாமதமாவதால் நடிகர் அஜித் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் ‘குட் பேட் அக்லி ‘ படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூனில் துவங்க உள்ளதால், விடாமுயற்சி படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என படக்குழுவினருக்கு கெடு வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here