வலிமை படத்தின் பாடலுக்கு வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள்.. இன்றிரவு வெளியீடு!!

0

தல ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய படம் வலிமை. பல மாதங்கள் காத்து இருந்த ரசிகர்களுக்கு சில நாட்களுக்கு முன் இப்படத்தின் அப்டேடை படக்குழு வெளியிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தாறுமாறாக வெளியான அந்த அப்டேட்டால் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் வலிமை. இதில் நடிகையாக காலா பட நாயகி ஹீமா குரேஷி நடித்துள்ளார். படத்தை தயாரித்துள்ளது போனி கபூர் மற்றும் இசையமைத்தது யுவன் ஷங்கர் ராஜா.

வலிமை படத்தின் பாடல்களை என்ஜாயி எஞ்சாமி புகழ், தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்றிரவு 9 மணிக்கு வெளியாகிறது. இந்த பாடல் ‘வேற மாதிரி’ என்று தொடங்கும் எனவும் மேலும் வலிமை படத்தின் அஜித்தின் அறிமுகப் பாடல் என்றும் சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here