போட்றா வெடிய., விடாமுயற்சி படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

0
போட்றா வெடிய., விடாமுயற்சி படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!
போட்றா வெடிய., விடாமுயற்சி படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவுள்ளதாக கடந்த மே 1 ஆம் தேதி லைக்கா நிறுவனம் அப்டேட் கொடுத்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இதன் படப்பிடிப்பு மே மாத இறுதிக்குள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன் பிறகு லைக்கா நிறுவனத்திற்கு வருமான வரி சோதனை நடந்ததால், இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்படி சில காரணங்களால் இப்பட ஷூட்டிங்கில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

கிருத்திகா உதயநிதி அசையா சொத்துக்கள் & வங்கி கணக்கு முடக்கம்., இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்!!

இந்நிலையில் தற்போது இப்படம் ஷூட்டிங் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வரும் ஜூன் மாதத்தின் முதல் வார இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here